கீய்விற்க வடக்கே 65 கிலோ மீற்றருக்கு அணிவகுத்துள்ள ரஷ்யப் படைகள்


உக்ரைனின் தலைநகர் கீய்விற்கு வடக்கே 65 கிலோ மீற்றர் தொலை தூரத்திற்கு ரஷ்யப் படையினரின் இராணுவ வாகனங்கள் தொடரணியாக நீண்டு காணப்படுவதாக மாக்சார் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இத்தொடரணியில் கவச வாகனங்கள், டாங்கிகள், பீரங்கிகள், மற்றும் டிரக் வாகனங்களும் காணப்படுகின்றன.

தெற்கு பெலாரஸில் தரைப்படைகள் மற்றும் தரைவழி தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவுகளின் வரிசைப்படுத்தப்பட்டதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டியது.

ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் மீது ஷெல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். 

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தனது அரசாங்கத்தை விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள ரஷ்யா வற்புறுத்துவதற்கான முயற்சியாக பேச்சுக்கள் அமைந்துள்ளது என்றார்.

எங்கள் பிரதேசமான எங்கள் நகரங்கள் மீது குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல்களின் பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. 

இந்த எளிய முறையின் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது என்று நான் நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

No comments