உக்ரைன் எல்லைக் கடற்பரப்பில் முகாமிட்டுள்ள ரஷ்யப் போர்க் கப்பல்கள்


உக்ரைன் எல்லையை ஒட்டி கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், செர்னிகிவ் உள்ளிட்ட நகரங்களில் 8ஆவது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக வான்வழித்தாக்குதல்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கருங்கடல் பகுதியில் பியோட்டர் மார்க்னோவ், புரோஜெக்ட்-1171, புரோஜெக்ட்-775 ஆகிய போர் கப்பல்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த போர்க்கப்பல்கள் ஆழம் குறைவான கடற்பகுதிகளிலும் இயக்க வல்லவையாகும். ஒவ்வொரு போர்க்கப்பலிலும், தலா 500 வீரர்கள், 4 தாக்குதல் உலங்குவானூர்த்திகளை ஏற்றிச்செல்ல முடியும்.

No comments