அடுத்த சில மணி நேரங்களில் உக்ரைன் - ரஷ்யா 2ஆம் கட்டப் பேச்சுக்கள்!!


உக்ரைன்-ரஷ்யா இடையேயான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய தூதுக்குழுக்கள் ஹெலிகாப்டர் மூலம் கலந்துரையாடல்களுக்குச் சென்றுகொண்டிருந்ததை போடோலியாக்  ஆன்லைனில் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

பேச்சுவார்த்தையில் மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் ஜி.ம்.ரி நேரப்படி 14:00 மணிக்கு நடக்கும் என உன்ரைனின் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த டேவிட் அராகாமியா கூறியுள்ளார்.

No comments