உக்ரைனின் மரிங்கா நகரைக் கைப்பற்றினர் ரஷ்ய ஆதரவு போராளிகள்!!


ரஷ்யாவால் தன்னாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் டோனட்ஸ்க் பகுதியிலிருந்து உக்ரைன் இராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்களை ரஷ்ய ஆதரவு போராளிகள் கைப்பற்றினர்.

அங்குள்ள மரிங்கா நகரில் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்ய ஆதரவு போராளிகளுக்கும் கடும் போர் நடந்து வந்தது. இந்த மோதலில் உக்ரைன் படையினர் அந்நகரை விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். அந்நகரை கைப்பற்றிய போராளி குழுவினர் உக்ரைன் படையினர் விட்டுச் சென்ற ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினர்.

No comments