ரஷ்ய எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயுவை புறக்கணிப்பதை ஜேர்மனி ஆதரிக்காது


உக்ரைன் வான் பரப்பில் பறக்க தடை விதிப்பதை ஜேர்மனி ஆதரிக்காது என்று ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மீண்டும் வலியுறுத்துகிறார்.

இன்று புதனன்று ஜேர்மன் சட்டமியற்றுபவர்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஜேர்மனி உக்ரைன் மீது பறக்க தடை விதிப்பதை ஆதரிக்காது அல்லது போரில் தலையிட ஜேர்மனி துருப்புக்களை அனுப்பாது என்று மீண்டும் வலியுறுத்தினார்.

நேட்டோ போரில் ஒரு தரப்பாக மாறாது.  எங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகளுடனும், அமெரிக்காவுடனும் நாங்கள் இதில் உடன்பாடு கொண்டுள்ளோம் என்றார்.

ஆனால் ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி மற்றும் இராணுவ உதவி மற்றும் ரஷ்யா மீதான கடுமையான தடைகள் உட்பட ஜேர்மனியின் உதவியை உக்ரைன் நம்பலாம் என்றார்.

ரஷ்ய எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயுவை புறக்கணிப்பதை ஜெர்மனி ஆதரிக்காது. ஆனால் மற்ற விநியோகஸ்தர்களைக் கண்டுபிடித்து, புதுப்பிக்கத்தக்கவைகளை அதிகரிப்பதன் மூலம் அந்த இறக்குமதியிலிருந்து தன்னைத்தானே விலக்கிக் கொள்ள முயல்கிறது என்று ஷோல்ஸ் மேலும்கூறினார்.

No comments