கந்தரோடையில் எதிர்ப்பு: மகிந்தவின் வருகை இரத்து!
யாழ்பாணம் கந்தரோடைக்கு சிறீலங்காப் பிரதமர் மகிந்த ராஜபச்ச வரவிருந்த நிலையில் அங்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக அவர் அங்க பிரசன்னமாகவில்லை என யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மகிந்த ராஜபக்ச அங்கு பல மத வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார். அதில் யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரைக்கு அடிக்கல் நாட்ட செல்லவிருந்தார். அங்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணினர் ஒன்றுகூடி எதிர்ப்பினை காட்டியிருந்தனர். இதனையடுத்து அவரது பயணம் இரத்து செய்யப்பட்டிருந்தது.
Post a Comment