கந்தரோரையிலும் புத்தர் சிலை!!


யாழ்ப்பாணம் கந்தரோடையிலும் புத்தர் சிலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததை அடுத்து வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தனும் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் அங்கிருந்த பொளத்த மதகுருவிடம் இங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து கேட்டறிந்துள்ளனர். இதேநேரம் குறித்த தமிழ்த் தரப்பினர் சென்றிருந்த வேளை அங்கு ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments