மரியுபோலை கைப்பற்ற ஒரு வாரம் ஆகலாம் - டெனிஸ் புஷிலனின்


மரியுபோலைக் கைப்பற்ற ஒரு வாரத்திற்கு மேலாகலாம் என ரஷ்ய ஆதரவு டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் டெனிஸ் புஷிலனின் (Denis Pushilin) தெரிவித்துள்ளார்.

இந்நகரம் மிகப் பொியது என்பதால் உடனடியாக இந்நகரத்தை கைப்பற்றும் வாய்பில்லா நிலை காணப்படுகின்றது. இந்நகரத்தைக் கைப்பற்ற இரண்டு தொடக்கும் மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் கூட ஆகலாம் என இண்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மரியுபோலின் நிலைமை மிகவும் மோசமானதும் கடினமானதுமாக உள்ளது என உக்ரைனின் துணைப் பிரதம மந்திரி இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.

உக்ரைனியப் படைகளை சரணடையுமாறு ரஷ்யா இறுதி எச்சரிக்கை நேற்று விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை உக்ரைனால் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் ரஷ்யா வழங்கிய கால அவகாசம் இன்று காலை 10 மணியுடன் முடிவடைந்தது.

No comments