சீனாவில் விமான விபத்து 132 போில் நிலை தெரியவில்லை!!


சீனாவில் 132 பேருடன் பயணித்த விமானம் இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானது என்று அந்நாட்டு சீனாவின் சிவில் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அறிவித்துள்ளது.

விமானம் குவாங்சி மாகாணத்தில் வுஜோ நகருக்கு அருகில் விழுந்து நொருங்கியது.

விமானம் மேற்கு மாகாணமான யுனானில் உள்ள குன்மிங்கில் இருந்து கிழக்கு கடற்கரையை ஒட்டிய தொழில்துறை மையமான குவாங்சூவை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 123 பயணிகளும் 9 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர் என சீனாவின் சிவில் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.

விபத்தில் எத்தைன பேர் கொல்லப்பட்டனர். எந்தனை பேர் காயமடைந்தனர் என்பது தெரியவரவில்லை.

விமானம் மலைப்பகுதியில் விழுந்ததால் மலைப்பகுதிகளில் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு சேவை ஈடுபட்டுள்ளது.


மதியம் 2:15 மணிக்கு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக குவாங்சி மாகாண அவசர மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 

No comments