கிழக்கில் வியாபாரத்தில் பிள்ளையான்! வடக்கின் கடல்வளத்தை டக்ளஸ் அன் கோ விற்பனை செய்ய மட்டக்களப்பை பிள்ளையான் விற்பனை செய்துவருகின்றார்.

இந்நிலையில் வாகரை பிரதேசத்தில் இறால் வளர்ப்பு பண்ணை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தி தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

 வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பு ஒன்று கூடியவர்கள் கையில் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை பிரதேச செயலகத்தின் வாயில் கதவினை பூட்டியும் செயலக உத்தியோகஸ்த்தர்கள் உள்ளே செல்லாதவாறும் தடுத்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.

 பின்னர் பொலிசாரின் தலையீடு மற்றும் பிரதேச செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கதவினை திறந்து விட்டனர்.

இதன்போது அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இவ் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாகவுள்ளதாகவும் அவர் இத்  திட்டத்தினை கைவிடவேண்டுமென தெரிவித்தனர்.

 தனியார் கம்பனி ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதன்போது பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.தெரிவிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை பயனற்று போனதால் பிரதேச செயலக நிர்வாகம் அவ்விடத்தினை விட்டு விலகி சென்றனர்.

இரண்டாம் கட்டமாக மீண்டும் பேச்சு மேற்கொள்ளப்பட்டது. என போராட்டத்தில ஈடுபட்டவர்களில் 10 பேர் கொண்ட நபர்கள் வரவழைக்கப்பட்டு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 கலந்துரையாடல் நிகழ்வில் இத்திட்டத்திற்கான பல்வேறு குறைபாடுகள் முன்வைக்கப்பட்டு திட்டத்தினை அமுல்படுத்தாதவாறு தடுத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். 

குறித்த திட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் 1100 கெக்ரயர் அளவு நிலப்பரப்பில் 150 கெக்ரயர் அளவு நிலம் நண்டு வளர்பிற்கு மாங்கேணி பகுதியில் ஒதுக்கபட்டுள்ளது ஏனைய 950 கெக்ரரில் இறால் வளர்பிற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் இத்திட்டத்திற்கு மக்களின் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதாகவும். தற்போது மேற்கொள்ளும் நில அளவை விடயத்pனை இடை நிறுத்தி தருவதாகவும் கலந்துரையாடலின் போது பிரதேச செயலக நிர்வாகத்தினரால்  தெரிவிக்கப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தினை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.குறித்த விடயம்  தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடப்பட்டு போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

இதனால் பிரதேச செயலக நிர்வாக நடவடிக்கைகளில் சுமார் 4 மணி நேரம் பாதிப்பு  ஏற்பட்டது.

 வாகரை தட்டுமுனை தொடக்கம் கட்டுமுறிவு வரையான சுமார் 950 கெக்ரயர்  அளவு கொண்ட ஆற்று களப்பு பிரதேசங்களில் இறால் பண்ணை அமைக்கும் நடவடிக்கைக்கு காணி தெரிவு செய்யப்பட்டு நில அளவையாளர்களை கொண்டு காணி அளவீடு செய்யப்பட்டு வருவாகவும் இவ் விடயம் தொடர்பாக பிரதேச மட்ட சமூக அமைப்புக்கள் மற்றும் மீனவர் சங்க அமைப்புக்களுடன் எது விதமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லையென போராட்டத்தில் ஈடுபட்டோர் கவலை தெரிவித்தனர்.

இவ் நடவடிக்கையினை தொடர்ந்தால் ஆற்றுப் பகுதியினை அண்மித்த 

பகுதியில் இயற்கை சமநிலையில் குழப்பம் ஏற்படுவதுடன் களப்பு மீன்பிடிசேனைப் பயிர் செய்கைகாடு அழிப்புபறவைகள்விலங்குகளுக்கு சரணாலயம் இல்லாமல் போதல்இவாழ்வாதாரம் பாதிக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கின்றனர்.


No comments