நெகிழிகளும் விலையேறறம்!


மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே ஷாப்பிங் பேக்குகள் மற்றும் லஞ்ச் சீற்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மறுசுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் மொத்த விலை 2 ரூபாவாகவும் 5 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் விலை 9 ரூபாவாகவும் 10 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் விலை 17 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த லஞ்ச் சீற்றின் விலை 2.50 ரூபாவிலிருந்து 3.50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களாக மூலப்பொருட்களை உரிய முறையில் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 500 தொழிற்சாலைகள் உற்பத்தி நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாகவும் 15,000 பேர் வேலை யிழந்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் அனுர ஹேரத் தெரிவித்தார்.
தற்போது சுமார் 400 தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும் நாளாந்த உற்பத்திக்குத் தேவை யான மூலப்பொருட்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கிலோ மூலப்பொருளின் விலை 500 ரூபாவிலிருந்து 750 ரூபாவாக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments