கொழும்பில் மாபெரும் பேரணி!



கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணி இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்த நாயக்க தெரிவித்தார்.

இன்றைய பேரணியானது எதிர்க்கட்சிகளின் நிகழ்வு மட்டுமல்ல, அரசாங்கத்தின் நடவடிக் கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் இதில் பங்கேற்குமாறும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.

அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவம் நாட்டில் பாரிய பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்த வாரம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை மக்கள் மீது பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை வினைத்திறனுடன் நடத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் முடியாவிட்டால் பதவி விலகுமாறு போராட்டத் தின் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதே தமது நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


No comments