தமிழக முதல்வரை முன்னுதாரணமாக்கிய ஜேவிபி!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள பொருளாதார பேரவையில்  உலகின் பிரபலமான பொருளாதார நிபுணர்களும்  கல்விமான்களும் இடம்பெற்றுள்ளனரென ஜவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு காரணமானவர்களே ஜனாதிபதியின் பொருளாதார பேரவையில் இடம்பெற்றுள்ளனர் .

ஜனாதிபதி எதிர்பார்ப்பதை  போல இந்த பொருளாதார கவுன்சில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் வெற்றிபெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கவுன்சிலில் நிபுணர்களோ கல்விமான்களோ இடம்பெறவில்லை,தற்போதைய மோசமான நெருக்கடிகளிற்கு காரணமானவர்களே அதில் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள பொருளாதார பேரவையில்  உலகின் பிரபலமான பொருளாதார நிபுணர்களும்  கல்விமான்களும் இடம்பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவில் பசில் ராஜபக்சவும் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவுமே இடம்பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக தங்கள் நிபுணத்துவத்தை வழங்குவதற்கு இலங்கையை சேர்ந்தவர்கள் முன்வந்த போதிலும் அரசாங்கம் அவர்களின் ஆலோசனையை புறக்கணித்துவிட்டது என விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.


No comments