இலங்கை:முட்டைகள் இலவசம்!

 


ஹிருனிக்கா முட்டை வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்கவில்லை. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வையே ஹிருனிக்கா கோரியிருந்தார். ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக சத்தம் போட்டதாலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கு முன்பாக சென்று சத்தமிட்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் கூறியுள்ளார். 

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆளுங்கட்சி எம்.பி மதுர விதானகே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்ற சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பல கேள்விகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தியினரிடம் வழங்குவதற்காகவே அங்கு சென்றிருந்தேன் எனவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் அங்கிருந்த மக்கள் சிலரே அழுகிய முட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும் இத்தாக்குதலுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸாருக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளேன் எனவும் தெரிவித்தார். 

No comments