சீன-இந்திய போட்டி:மீனவர்களிற்கு நிவாரண அதிஸ்டம்!சீன தூதர் நிவாரணம் வழங்கி வடக்கு மாகாண மீனவர்களுடன் ஜக்கியத்தை பேணியுள்ள நிலையில் மறுபுறம் இந்திய வாழவாதார உதவி யாழில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கென இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே கொழும்பிலிருந்து வருகை தந்து வழங்கி வைத்துள்ளார்.

யாழ். மீனவர்களிற்கு உதவிகளை வழங்கும் இந்த திட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதில் யாழில் உள்ள  இந்தியத் துணைத்  தூதுவர் மற்றும்  யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதற்கமைய யாழில் 600 பேருக்கு வழங்கப்படும் உதவி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்னதாக சீன தூதர் இரண்டாயிரம் மீனவர்களிற்கு உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments