மின் தாக்கி தம்பதிகள் பலி!யாழ்ப்பாணம் புத்தூர்ப் பகுதியில் மின்சாரத்தில் அகப்பட்ட மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

வீட்டின் கிணற்றடியில் உள்ள நீர்த் தொட்டியடிலேயே இவ்வாறு மின்சாரத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது கணவனும் மனைவியுமே இவ்வாறு பரிதாபகரமாக  உயிரிழந்துள்ளனர்.

இதன்போது கணவரான குகப்பிரகாசம் வயது 59 மற்றும் அவரது மனைவி சுகுணா வயது 55 ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். 

இந்த சம்பவம. இடம்பெற்றபோது பிள்ளைகளில் இருவர்  பணிக்கும் ஒருவர் பல்கலைக் கழகமும. சென்றிருந்த நிலையில் வீடு திரும்பிய சமயமே அவதானித்து அச்சுவேலி பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

No comments