தேங்காய் துருவ மட்டுமே முடியும்!விமல் வீரவன்ச போன்றவர்கள் ஜேவிபிக்கு திரும்பி வருகை தந்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோமென அக்கட்சியின் பிரமுகரான சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.கட்சியில் துரோகிககளிற்கு இடமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற தலைவர்களை தென்னம் மட்டையில் கூட வெட்டி சாய்க்க முடியும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

வீரவங்ச மற்றும் கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விமல் வீரவங்ச ஏன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பார்க்கின்றார்?. அடுத்த தேர்தலில் எந்த அணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்காக அவர் இதனை செய்கின்றார்.

இவர்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே மேடையை அமைத்து கொடுத்தது. அரசாங்கத்துடன் இருக்க முடியாது என்றால், விலகலாம். வீரவங்ச, கம்மன்பில போன்றவர்களை தென்னம் மட்டையில் வெட்டி சாய்க்க முடியும்.

பலவந்தமாக இவர்களை வைத்துக்கொண்டு பாலுட்டும் தேவை எமக்கில்லை. இவர்களை போன்ற வெற்று வீரர்கள் எங்குமில்லை. இவர்கள் மைக் டைசன்கள். அதுதான் உண்மை.

இவர்கள் உடம்பில் இருந்துக்கொண்டு காதை கடிக்கும் வேலையை செய்தனர். உதய கம்மன்பிலவுக்கு துறை சார்ந்த அமைச்சர் என்ற வகையில் எரிபொருளை இறக்குமதி செய்து வழங்க தெரிந்திருக்க வேண்டும்.

மக்கள் எரிபொருளை கொள்வனவு செய்ய வரிசைகளில் நிற்கும் போது அவருக்கு பொறுப்பில்லையாம். எரிசக்தி அமைச்சரே எரிபொருளை பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால், எரிசக்தி அமைச்சர் பதவி எதற்கு தேங்காய் துருவவா? என ரோஹித்த அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments