வெடுக்குநாறியில் இம்முறை சிவராத்திரி இல்லை!
நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இம்முறையும் சிவன்ராத்திரி நிகழ்வு நடைபெற்றிருக்கவில்லை.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் பொலிசாரால் வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
அதனை தொடர்ந்து ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த தடைகளால் கடந்த வருடத்தை போலவே இம்முறையும் சிவராத்தி நிகழ்வை நடாத்தமுடியாத நிலை ஏற்பட்டது.
காலை முதல் குறித்த ஆலயவளாக பகுதியில் இராணுவத்தினர், பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பொதுமக்கள் சிலர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
Post a Comment