மீண்டும் ஆறு மணி நேர மின்வெட்டு!இலங்கையில்  பல பகுதிகளில் இன்றும் சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே மற்றும் எல் ஆகிய பகுதிகளில் காலை 8.00 மணிக்கு மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித் துள்ளது. அத்துடன் மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு ஏற்படவுள்ளது.

இதற்கிடையில், P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் 5.30 மணிக்கு இடையில் 4.30 மணித்தியாலங்கள் மின் வெட்டு ஏற்படும்.

இதேவேளை மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் 1 மணித்தியாலம் 50 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.


No comments