காகித தட்டுப்பாடு:நடவடிக்கையாம்!
காகித தட்டுப்பாட்டை அடுத்து இலங்கையில் புதின பத்தரிகைகள் ஒவ்வொன்றாக நின்றுவருகின்றன.
காகித தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் காகித உற்பத்தித் துறையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
டொலர் நெருக்கடியின் விளைவாக கடன் கடிதங்களை திறப்பதில் ஏற்பட்ட சிரமங்களினால் காகித தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு, எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment