ரஸ்யாவிடம் கைநீட்டியது இலங்கை:உக்ரேனிற்கு அல்வா!ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை  கடன் கேட்டுள்ளது.

மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி  ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே கடன் கேட்டுள்ளது.

இதனிடையே உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 141 நாடுகள் ஆதரித்தன, இலங்கை வாக்களிக்கவில்லை.

முன்னதாக இலங்கை அரசின் நெருங்கிய சகாவாக உக்ரேன் இருந்ததுடன் மிக் விமானிகளாக தனது படையினரை பணிக்கமர்த்தவும் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments