இலங்கை:நிலமை கவலைக்கிடம்! இலங்கையின் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்துண்டிப்பின் பிரகாரம் நாளை புதன்கிழமை முதல்  7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் 5 மணி நேரமும் இரவில் இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் மாத்திரம் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேருந்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டீசல் மற்றும் மண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முற்றாக தீர்ந்துள்ள நிலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் கடந்த சில நாட்களாக காத்திருக்கின்றன.

மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கப்பல் மூலம் எரிபொருள் வந்திருப்பதாக இலங்கை அரசு விளக்கமளித்துவருகின்ற போதும் மின்துண்டிப்பு நேரம் நாளிற்கு நாள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments