அறிவாற்றலை மேம்படுத்தும் யூசிமாஸ்!



 சிறுவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தும்  யூசிமாஸ் கற்பித்தல் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்  சந்திப்பு   திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இவ் ஊடக சந்திப்பில் யூசி மாஸ் கல்வி நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் சித்திரா இளைமைநாதன் கலந்துகொண்டு பின்வருமாறு தெரிவித்தார்.

எமது யூசிமாஸ் நிறுவனமானது உலகின் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் நிலையில் இலங்கையில் 30க்கு மேற்பட்ட பிரதேசங்களில் செய்யப்பட்டு வருகிறது.

எமது கல்வி நிறுவனத்தின் பிரத்தியோக செயற்பாடாக 4 வயதாகும் 14 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களை எதிர்கால கல்விக்காக தயார்படுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம்.

அதாவது மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தல் நிழல் படங்களை உருவாக்குதல் மற்றும் பாடத் திட்டங்களை விரைவாக மேற்கொள்ளல் போன்ற விடயங்களை உள்ளடக்கி மாணவர்களை சிறுவயதிலிரந்து எதிர்கால கல்விக்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமல்லாது எம்மால் பயிற்றப்பட்ட பலர் உள் நாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இலகுவாக தமது மேற்படிப்பு களை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட யாழ் பரியோவான் கல்லூரி மாணவன் யோவான் அருணன் கருத்து தெரிவிக்கையில் யூசிமாஸ் நிறுவனத்தில் எனது கற்றல் செயற்பாட்டை சிறுவயதிலிருந்து மேற்கண்டு வருகிறேன்.

இங்கு கற்கும்போது வாழ்க்கைக்கு தேவையான பல விடயங்களை என்னால் இலகுவாக மேற்கொள்ள முடிகிறது.

பாடசாலை மட்டம் வலைய மட்டம் மற்றும் மாவட்ட மட்டங்களில் இடம்பெறும் கணித வினாடி போட்டிகள் பங்குபற்றி  பல தேசிய போட்டிகளிலும் பங்குபற்றி முதலிடத்துக்கு வந்துள்ளேன்.

அது மட்டுமல்லாது வெளிநாடுகளில் இடம்பெறும் போட்டிகளிலும் பங்கு பற்றி தங்கப்பதக்கங்களையும் பெற்றேன்.

ஆகவே குறித்த கல்வி திட்டம் எனது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கின்ற நிலையில் அனைத்து சிறுவர்களும் குறித்த திட்டத்தில் பங்கெடுத்து பயனடையுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்

No comments