முற்றுகைக்குள் மரியோபோல் நகரம்: சரணடைய மறுக்கும் உக்ரைன் படைகள்!!


உக்ரைனின் துறைமுக நகரமான மரியோபோல் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மரியபோலில் உள்ள உக்ரைன் படையினர் பாதுகாப்பாக வெளியேற ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் ரஷ்யா கோரியிருந்தது. அதற்கான காலக்கெடுவையும் ரஷ்ய வழங்கியிருந்தது. இந்த காலக்கெடுவை உக்ரைன் நிராகரித்ததோடு காலக்கெடு விதிக்கப்பட்ட நேரமும் கடந்துவிட்டது.

காலை 10 மணி முதல் அந்நகரத்தில் உள்ள உக்ரைன் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெளிநாட்டுக் கூலிப்படையினர் ஆயுதங்களை களைவதற்கும் நகரத்தை விட்டு வெளியேறுவதற்கும் ரஷ்யப் படைகள் அனுமதித்திருந்தன.

அத்துடன் ஆயுதங்கள் கீழே போட்டதும் படைகள் சரணடைந்ததும் 2 மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருக்கும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பணி முடிந்ததும் நகரத்திற்கும் மனிதாபிமான உதவிகள் கிடைக்க அனுமதிகப்படுவார்கள் என ரஷ்யப் படைகள் கூறியிருந்தன.

சுமார் 300,000 பேர் அங்கு சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அங்குள்ள மக்களுக்கான அத்தியவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. அம்மக்களுக்கு உதவிகள் கிடைக்க அந்நகரத்திற்குள் நுழைவதை ரஷ்யப் படைகள் தடுக்கின்றன என உக்ரைன் குற்றஞ்சாட்டுகிறது.

இந்நிலையில் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோல் நகரை பட்டினி போட்டு சரணடைய ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பல வாரங்களாக ரஷ்ய குண்டுவீச்சை எதிர்கொண்டு, மின்சாரம் இல்லாமலும் நீர் இல்லாமல் குடியிருப்பாளர்கள் சகித்தபடி வாழ்ந்து வருகின்றனர்.

ரஷ்யர்கள் மனிதாபிமான பாதைகளை திறப்பதில்லை. மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை அவர்கள் தடுக்கிறார்கள். நகரம் சரணடையவில்லை என்றால் மக்கள் அவர்கள் வெளியே விடமாட்டார்கள். மனிதாபிமான உதவிகளையும் அனுமதிக்க மாட்டார்கள்.

மரியுபோல் ரஷ்ய இராணுவத்தின் முக்கிய மூலோபாய இலக்காகும். ஷ்யா மரியுபோலைக் கைப்பற்றினால், அது ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகள் மற்றும் 2014 இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியாவால் கட்டுப்படுத்தப்படும். டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்குப் பகுதிகளுக்கு இடையே ஒரு நில வழித்தடத்தை உருவாக்க உதவும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments