குடும்பமாக தற்கொலை சாத்தியம்!



 நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மூன்று மாதங்களாக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

நிதியமைச்சர் உடனடியாக நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகவேண்டும் என சபாநாயகர் அழைப்பு விடுக்கவேண்டும்  என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

எனினும் இதற்கான அதிகாரம் தனக்கு இல்லை என சபாநாயகர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற கடுமையான வாக்குவாதத்தின் போது டிசம்பர் பத்தாம் திகதியே  நிதியமைச்சர் இறுதியாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பசில் ராஜபக்சவை உடனடியாக நாடாளுமன்றத்தி;ற்கு அழைக்கவேண்டும் என லக்ஸ்மன் கிரியல்ல வேண்டுகோள்விடுத்தார்.

அரசாங்கத்தின் தோல்வியால் பிள்ளைகளிற்கு உணவளிக்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்துகொள்கின்றனர் எனஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

பால்மா இல்லை, உணவில்லை, டீசலில்லை, எரிபொருள் இல்லை, டொலர் இல்லை, மருந்து இல்லை, மின்சாரம் இல்லை. இதற்கு பெயர் வங்குரோத்து இல்லையென்றால் வேறு என்ன.எனஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சி;ல்வா தெரிவித்துள்ளார்.

எமது நாடு இப்படி இருக்கிறது என நாம் சொல்லும் போது வெட்கமாக இருக்கிறது. நாம் எதிர்க்கட்சி என்றாலும், இலங்கையர்கள். இந்த மண்ணிலே தான் சாகப்போகின்றோம்.எனஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சி;ல்வா தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்க நாமும் வருகின்றோம். உங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளுங்கள். உங்களால் தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.- எனஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சி;ல்வா தெரிவித்துள்ளார்

No comments