உக்ரைன் பிரச்சினை! 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்வார்கள் என எச்சரிக்கை!!


கிழக்கு உக்ரைனில் முன்னரங்கில் போர் தொடங்கினால் அதனை அண்டி வசிக்கும் இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர நோிடும் என நோர்வே அகதிகள் கவுன்சில் இன்று வியாழக்கிழமை எச்சரித்துள்ளது.

கிழக்கு உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்களின் இயல்வு வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் ஒரு அரசியல் முன்னேற்றத்திற்காக காத்திருக்கிறோம் என நோர்வே அகதிகள் கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஜான் எகெலேண்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மோதலின் விளைவாக ஏற்படும் மனித துன்பங்களை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இது பொதுமக்களின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும், பாரிய இடப்பெயர்வை ஏற்படுத்தும் மற்றும் மனிதாபிமான தேவைகளை அதிகரிக்கும்," என்று அவர் கூறினார்.

No comments