பாரிய பிளவு: ராஜினாமா செய்கிறார் உதய கம்மன்பில

பாராளுமன்றத்தில் நாளைய தினம்  விசேட உரையாற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடிதம் மூலம் அமைச்சர் இந்த அனுமதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அந்த அமைச்சர் வெளியிட்ட கருத்தின் காரணமாக இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் கம்மன்பிலவுக்கு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

டொலர் நெருக்கடிக்கு கொரோனா தொற்று காரணம் அல்ல என அமைச்சர் கம்மன்பில கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

டொலர் நெருக்கடியே வெளிநாட்டு நாணயங்களை தொடர்ந்து கடனாக பெறுவதற்கு முக்கிய காரணம் எனவும் தொற்றுநோய் குறைந்த பின்னரும் டொலர் நெருக்கடி தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினை மற்றும் அதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அரசாங்க எம்.பி.க்கள் அமைச்சரிடம் பலமுறை கேள்வி எழுப்பியதற்கு அமைச்சரும் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் கம்மன்பிலவின் கூற்றை ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் மறுத்துள்ளதாகவும் டொலர் நெருக்கடியின் உண்மை நிலவரத்தை விரிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கூட்டத்தின் முடிவில் அமைச்சர் கம்மன்பில விரக்தியுடன் எழுந்து சென்றார். அதன்பின் விசேட உரையொன்றை ஆற்ற அவகாசம் கோரி, நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

No comments