கோத்தாவை காண ஊசிகள் முக்கியம்!


கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி வவுனியா பல்கலைக்கழகத்திற்கு வருகை தரவள்ள நிலையில் நிகழ்வில் பங்கெடுக்கின்ற அனைவரும் மூன்று கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளவேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆவ்வாறு தடுப்பூசி பெற்றமை தொடர்பில் வழங்கப்பட்ட அட்டையின் பிரதியை ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும் கோரப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்படவுள்ள வவுனியா பல்கலைக்கழக நிகழ்வில் பங்கெடுக்க வடமாகாணத்தை சேர்ந்த அதிகாரிகள்,பாடசாலை அதிபர்கள் என பலரையும் வடக்கு ஆளுநர் அழைத்துள்ளார்.

இந்நிலையில் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியின் மூன்று ஊசிகளையும் பெற்றிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments