தமிழ் மீனவர்கள் அரசிடம் நிவாரணம் கேட்கவில்லைநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்கெடும் இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு தராத அரசாங்கமாக இந்த அரசு காணப்படுகிறது என ஜே.வி.பி இன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித கேரத் சபையில் இன்று தெரிவித்துள்ளார்,

இந்திய மீன்வர்களின் அத்து மீறல்கள் இங்கு அதிகரித்து காணப்படுகிறது.வடக்கு மீனவர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

அவர்கள் அரசிடம் பணம் கேட்கவில்லை.கடலில் தமது உயிருக்கு பாதுகாப்பும்,நமது நாட்டு கடல் வளம் அழிக்கப்பட கூடாது என்று தான் போராட்டம் செய்கிறார்கள்.

ரோலர் படகு தடை உள்ளிட்ட முக்கிய சட்டங்கள் நாடாளுமன்றில் அமுல் படுத்தப்பட்டன.

அவற்றை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்டகாலமாக இழுபறியில் காணப்படுகிறது.இதற்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.வடக்கு மீனவர்களின் உயிருக்கு கடலில் பாதுகாப்பு இல்லை என்று தான் போராட்டம் தொடர்கிறது என்றார்.

No comments