ஒரே நாடு: ஒரே சிங்களம்!

இலங்கை முழுவதுமுள்ள மாகாணசபைகளிற்கு சிங்களவர்களை பிரதம செயலாளர்களாக நியமித்து சாதனை புரிந்துள்ளார் கோத்தபாய.

கிழக்குமாகாண பிரதம செயலாளராக, துசித்த பி.வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான துசித்த பி.வனிகசிங்க,  கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், அரச நிறுவனங்கள் பலவற்றிலும் பல்வேறு பதவிநிலைகளை வகித்துள்ளார்.

No comments