சுவீடன் பள்ளியில் ஆயுத முனையில் கணினிகளைத் திருடிய கொள்ளையர்கள்!!


சுவீடனின் மத்திய பகுதியில் ஆயுதமேந்திய இருவர் பாடசாலை மாணவர்களின் கணினிகளை திருடிச் சென்றுள்ளனர்.

சுவீடனின் வாஸ்ரேரஸ் (Västerås) அமைந்துள்ள ருட்பெக்கியன்ஸ்கா (Rudbeckianska) என்ற உயர்நிலைப் பள்ளியில் மூகமூடி அணிந்த இரு நபர்கள் பாடங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வகுப்பறைக்குள் நுழைந்து கத்தி முனையில் மிரட்டி மாணவர்களின் கணிகளை திருடிச் சென்றனர்.

மாணவர்களும் ஆசிரியர்களும் குறித்த சந்தே நபர்களை துரத்திச் சென்றபோது அவர்கள் சில கணனிகளை போட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

சம்பவத்தில் பாடசாலை மாணவர்களோ, ஆசிரியர்களோ காயமடையவில்லை. ஆனால் ஒரு வழிப்போக்கர் தலையிட முயன்ற போது காயமடைந்துள்ளார். 

பாடசாலை தலைமை ஆசிரியர் ஹென்ரிக் பீட்டர்சன் கருத்துரைக்கையில்:-

மாணவர்களின் உடல் நிலை சரியில்லை. இதுபோன்ற ஒரு பயங்கரமான மற்றும் அதிர்ச்சிகரமான நிகழ்வைக் கண்டதற்காக சோகமாகவும், வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் பலர் உள்ளனர் என்றார்.

கொள்ளையர்களை துரத்திச் சென்ற ஆசிரியர்களுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments