பற்றி எரிகிறது உக்ரைன் எரிவாயு கிடங்கு மற்றும் எண்ணெய் கிடங்கு!
உக்ரைனின் வடகிழக்கு நகரான கார்கிவில் உள்ள எரிவாயு குழாய் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் முதல் நாள் முதல் ரொக்கெட் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக ரஷ்யா இராணுவக் கட்டமைப்புகளுக்கு மீது தாக்குதல் நடத்தி வந்தது.
உக்ரைனின் இராணுவத் தளங்களுக்குப் பிறகு ரஷ்யா இப்போது எரிவாயு மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்பைக் குறிவைக்கக்கூடும் என்று பல கருத்துக்கள் உள்ளன.
கியேவுக்கு வெளியே வாசில்கிவ் நகரில் உள்ள எண்ணெய்க் கிடங்கு ரஷ்ய ராக்கெட் மூலம் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
தாக்கப்பட்ட பகுதிகளில் தீப்பிழப்புகள் பற்றி எரிவதை காணொளிகள் காட்டுகின்றன.
Post a Comment