கனடாவைத் தொடர்ந்து நியூசிலாந்து தலைநகரும் முற்றுகை!!

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கனடாவில் சுதந்திர அணிவகுப்பு எனும் தலைப்பில் நடைபெற்றுவரும் வாகனப் பேரணியைத்

தொடர்ந்து அதனைப் போன்ற பேரணி நியூசிலாந்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஓட்டுநர்கள் பாரவூர்திகள் மற்றும் வாகனங்களைக் கொண்டுவந்து வீதியை மறித்து போராட்டங்களை கடந்த 10 நாட்களாக நடத்தி வருகின்றனர். குறித்த போராட்டத்தால் அவசரகால நிலையை அந்நகர மேயர் பிறப்பித்துள்ளார்.

குறித்த போராட்டங்கள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகப் பரவ தற்போது நியூசிலாந்திலும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான பாரவூர்தி ஓட்டுநர்கள் தலைநகர் வெலிங்டனில் பாரவூர்திகள் மற்றும் வாகனங்களில் அணிவகுத்து பாராளுமன்ற வீதியை முற்றுகையிட்டனர்.

இதனால் நியூசிலாந்து தலைநகரில் பதற்றம் ஏற்பட்டது. இதேபோல் தெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் லாரி டிரைவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments