10 நாள் போராட்டம்: யேர்மனி சால்புறுக்கனை வந்தடைந்து

தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 10ம் நாளாக (25/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.  

இன்று (25/02/2022) காலை 6 மணிக்கு Luxembourg - Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சார்புருக்கன் மாநகரசபையில் உதவி முதல்வரினை சந்தித்து சிறிலங்கா பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனவும் அதற்காக மாநகரசபைகள் யேர்மனிய நாட்டின் வெளிநாட்டமைச்சிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  பிரான்சு நாட்டினுள் நுழைந்து சார்குமின் மாநகர சபையில் முதல்வர், ஊடகம் , பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர், ஐரோப்பிய ஆலோசனை அவை உறுப்பினரோடும் சந்தித்து தமிழர்களுடைய வேணவாக்கள் வலியுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டத்தில்  யேர்மனிய நாட்டவர் ஒருவரும் தமிழர்களின் தீர்விற்காக தன் ஆதரவினை நல்கும்விதமாக அறவழிப்போராட்டத்தில் இணைந்து பயணித்துக் கொண்டு இருக்கின்றார்.  அத்தோடு சார்குமின் மாநகரசபை தன் முகநூல் பக்கத்தில் எமது சந்திப்பினை செய்தியாக்கி இருந்தனர்.

முக்கிய குறிப்பாக நாளை (26/02/2022) மதியம் 2 மணியளவில் லாண்டோ மாநகரத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டத்தில் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் இணைய இருக்கின்றது.





No comments