பெலாரஸிலிருந்தும் ஏவுகணை தாக்குதல் - உக்ரைன் அறிவிப்பு
பெலாரஸில் இருந்து உக்ரைன் நோக்கி ஏவுகணை ஏவப்பட்டதாக உக்ரைன் அதிகாரி தெரிவித்தார்
பெலாரஸில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் வடக்கு உக்ரைனில் உள்ள சைட்டோமிர் விமான நிலையத்தைத் தாக்கியதாக உக்ரைனின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஹெராஷ்செங்கோ தெரிவித்தார்.
பெலாரஸில் இருந்து உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் உக்ரைனில் இஸ்கந்தர் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் கூறினார்.
உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் உக்ரைனுடனான பெலாரஷ்ய எல்லையில் உள்ள ஒரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் முன்னதாக தெரிவித்தது.
பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக பெலாரஸிலிருந்து உக்ரைனுக்கு ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் உலங்க வானூர்திகள் பறக்காது என்று தனது பெலாருசியப் பிரதிநிதியிடமிருந்து உறுதிமொழி பெற்றதாக ஜெலென்ஸ்கி முன்பு கூறினார்.
இந்நிலையிலேயே பெலாரஸிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
Post a Comment