டக்ளஸ் ஏற்பாடு:ஸ்ராலினிற்கு கடிதமாம்!

வடக்கு கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களிற்கு ஈடாக தென்னிலங்கை மீனவர்களும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்ற போதும் தமிழக மீனவர்கள் பக்கம் முழுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக மீனவர்களது அத்துமீறலை தடுக்கவேண்டுமென கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பின்னணியில் மீனவ அமைப்பு பிரதிநிதிகளிடம் மகஜரொன்றில் ஒப்பங்களை திரட்ட நாளை அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு கிழக்கு பகுதியை சேராத தென்னிலங்கையை சேர்ந்தவர்களும் இந்தியாவின் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களும்  அடாத்தாக வடக்கு கடலில் புகுந்து சட்டவிரோத மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி  தமிழ் மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் மீன்வளத்தையும் அழித்து வருகின்றனர்.இவற்றையெல்லாம் தடுக்காது திட்டமிட்ட முறையில் வேண்டுமென்றே இவற்றை அனுமதித்து வருகிறது இலங்கை கடற்படையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


No comments