படகுகளைக் காணோம்! தேடும் அதிகாரிகள்!


மன்னாரில் படகுகளை ஏலம் விடுவதற்குச் சென்ற கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் படகுகள் காணப்படாத நிலையில் திரும்பியுள்ளனர்.

மன்னார் மாவட்ட கடற்பரப்பிற்குள் 2014ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு காலத்தில் ஊடுருவிய தமிழக மீனவர்களின் 9 படகுகள் மன்னாரிலும் 6 படகுகள் தலைமன்னர் கடற்படைத் தளத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு தரித்து வைக்கப்பட்டிருக்கும் படகுகளில் மன்னார் மாவட்டத்தில் 9 படகுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக பத்திரிகையில் பகிரங்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் படகுகளை ஏலம் விடுவதற்காக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் குழு மன்னார் முழுவதும் தேடியபோதும் அங்கே ஒரு படகுகூட காணப்படவில்லை. இந்நிலையில் படகுகள் காணப்படாமை தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாணத்திலும்,கிளிநொச்சியிலும் கைப்பற்றப்பட்ட இந்திய படகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments