நியூசிலாந்தில் காவல்துறையை நடனமாடி வெறுப்பேற்றிய போராட்டக்காரர்கள்

நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து போராட்டத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் அதிக சத்தத்துடன்

பாடல்களை ஒலிக்கவிட்டனர்.

போராட்டக்காரர்களோ போராட்ட களத்தை விட்டு வெளியேறாமல் காவல்துறையினரின் பாடல்களுக்கு நடமாடி காவல்துறையினரை வெறுப்பேற்றினர்.

தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றம் செல்லும் சாலைகளின் குறுக்கே கனரக வாகனங்களை நிறுத்தியும், கூடாரங்களை அமைத்தும் 6 நாட்களாக மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கனமழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த பல வழிகளிலும் காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.


No comments