வடக்கிலும் மீண்டும் கொரோனா மரணங்கள்!வவுனியாவில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் (பெப்-09) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு ஊடாக பெறப்பட்டிருந்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அமிர்தவல்லி - பத்மநாதன் (வயது-75) என்ற முதியவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

No comments