ஏப்ரல் வரை நாளாந்தம் ஒரு மணி மின்வெட்டு!இலங்கையில்  நிலவும் வரட்சி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்சார சபை தடையின்றி மின்சாரத்தை வழங்குவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் வரை நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை.

அத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டால், அமைச்சரவை ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் அனைத்து உண்மைகளையும் பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அவசர மின்சாரக் கொள்வனவு களுக்கு அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதுவும் நேற்று சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments