மன்னருக்கு மன்னாரிலிருந்து மின் வேண்டுமாம்!ஜனாதிபதியான பின்னர் வடக்கிற்கு எட்டிப்பார்த்திராக கோத்தபாய மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மின்பற்றாக்குறையால் நாடு முடங்கியுள்ள நிலையில் புதிய காற்றாலைகள் அமைக்க கூடிய இடங்கள் குறித்து அறிக்கை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளாராம்.

மன்னார் தாழ்வுப்பாட்டில் இருந்து தலை மன்னார் வரை அமைக்கப்பட்டுள்ள காற்றாலையில் தற்போது 200 கிலோ வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அதேநேரம் மேலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைந்துள்ள வின்மின் உற்பத்தி நிலையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி இரண்டு மணி நேரம் உயர் அதிகாரிகளிடம் அது தொடர்பான விபரங்களையும் கேட்டறிந்தாராம்.

நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகள் செயலிழப்பு மற்றும் லக்ஸபான மின்துண்டிப்பையடுத்தே வடக்கில் மின்சாரத்தை பெற அவர் ஓடிவந்துள்ளார்.
No comments