தலைவர் படம் :13 மாத சிறையின் பின் விடுவிப்பு! முகநூலில் மாவீரர் தினத்தில்; தலைவர் பிரபகரனின் உருவப்படம் அடங்கிய படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் பொதுமக்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையின் அடிப்படையில்  ஒரு வருடத்தின் பின்னராக இன்று   புதன்கிழமை  பிணையில் விடுவித்துள்ளது.

கடந்த 2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி மாவீரர்தினத்தன்று தலைவர் பிரபாகரனின் உருவப்படம் அடங்கிய படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மட்டு ஏறாவூரில் பயங்கரவாத தடைசட்டத்தின் நான்கு பொதுமக்கள் கைதாகியிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்து கடந்த 13மாதங்களாக தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படடிருந்தனர்.

No comments