கச்சதீவிற்கு அனைவருக்கும் தடை!


கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவ நிகழ்விற்கு இலங்கை அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புதிய தீர்மானப்பிரகாரம் இலங்கை இந்திய யாத்திரீகர்கள் எவருமின்றி பங்கு தந்தையர்களது பங்கு பற்றலுடன் இவ்வாண்டும் கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவ நிகழ்வு நடைபெறுமென இலங்கை மீன்பிடி அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலினை யாழிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளள் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினை யாழிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு கச்சதீவு திருவிழா தொடர்பில் உரையாடிய போது இக்கோரிக்கையை அவரிடம் முன்வைத்தேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


No comments