கச்சதீவிற்கு கோத்தா கட்டுப்பாடு!கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன்  நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் இருந்து 50 பக்தர்களும் தமிழ்நாட்டில் இருந்து 50 பக்தர்கள் மாத்திரம் இம்முறை  உற்சவத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“அதேவேளை, இந்த உற்சவ  கட்டுப்பாடுகள் குறித்து மிக விரைவில்  அறிவிக்கவுள்ளோம். அத்தோடு, பங்கு கொள்பவர்களைத் தீர்மானிக்கும் பொறுப்பு யாழ். ஆயர் தலைமையிலான பங்கு தந்தைகளிடம் விடப்பட்டுள்ளது” என்றார்.

இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 யாத்திரிகர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

எனினும், யாத்திரிகர்கள் எவரையும் அனுமதிப்பதில்லை எனவும், அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், இது குறித்த உத்தரவை அமைச்சரவைக்கு ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் தெரிவித்திருந்தார


No comments