எத்தனையை தூக்குவது:குழப்பம்?

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம்,   இலங்கைஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அநுராதபுரத்தில் நேற்று (09) நடைபெற்றது.

இவ்விருவரும் ஒரே நேரத்தில் மேடைக்கு ஏறி, மக்களை நோக்க கைகளை உயர்த்தி காண்பித்த வண்ணம் வணக்கம் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு கைகளையும் உயர்த்தி காண்பித்து கைகளை அசைத்துக்கொண்டிருந்தார். பிரதமர் தனது வலது கையை மட்டுமே உயர்த்தி காண்பித்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பின்பாக நின்றுகொண்டிருந்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பிரதமரின் இடது கையை பிடித்து தூக்கி காண்பிப்பதற்கு முயற்சித்தார். எனினும், இடது கையை வேகமாக இழுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ரோஹிதவின் கையை தட்டிவிட்டார்.


No comments