எப்போது தேர்தல் வேண்டும்?

ராஜபக்ஷர்கள், தேர்தலுக்கு எப்போதுமே பயந்தவர்கள் இல்லை, ஆகையால் நீங்களும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சியினருக்கு அறிவுரை கூறிய ஆளும் தரப்பு, எப்போது தேர்தல் வேண்டும் எனக் கேட்டது.

பாராளுமன்றத்தில் இன்று (10) ​நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹோரண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ஆளும் கட்சியின் பிரதம கொ​றடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ புள்ளே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாங்கள் தேர்தலுக்கு பயந்தவர்கள் அல்லர், ராஜபக்ஷர்களும் பயப்பிடமாட்டார்கள், தேர்தல் எப்​போது வேண்டும். தேர்தல் நடக்கவேண்டிய நேரத்தில் தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த ஜோன்ஸ்டன், அதில் மொட்டு விஷேட வெற்றியை பெறும் என்றார்.

No comments