நல்லாட்சியை நாசமாக்கியவர்கள்:ஒஸ்டின் பெர்ணாண்டோ!



சிவில் சமூகத்துடனும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களுடனும் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தற்போதைய அரசாங்கமே குழப்பியதுஎன  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் செயலாளருமானஒஸ்டின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளை தற்போது இந்த அரசாங்கம் முன்னெடுக்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019க்கு பின்னர் தாமரை மொட்டு அரசாங்கம் ஆரவாரத்துடன் முன்னெடுத்த ஜெனிவா நடவடிக்ககளில் இருந்து விலகுதல் என்ற செயற்பாட்டின் பின்னணியிலேயே அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகளை ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் ஜிஎல்பீரிஸ் அலி சப்ரி யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயம் குறித்துவெளியான அறிக்கைகளை பார்க்கின்றபோது அவர்கள் தேவை மதிப்பீடுகளை மேற்கொள்கின்றனர் போல தோன்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களின் தகவல்களின் படி ஜனாதிபதி இன்னமும் தமிழ்தேசியகூட்டமைப்பினையோ அல்லது ஏனைய தமிழ் கட்சிகளையோ அல்லது புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளையே சந்திக்கவில்லை( யுகதனாவி பாணியில் இரகசியமாக நடந்திருந்தால் அன்றி) என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அவ்வாறான சந்திப்பு குறித்து அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தற்போது அவர்களை சந்தித்தால் ஆகக்குறைந்தது ஒரு தமிழ்குழுவின் கருத்தினையாவது செவிமடுப்பார் என தெரிவித்துள்ள ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதி தமிழ் கட்சிகளை சந்திக்க அவசரப்படாத போது அமைச்சர்களிற்கு ஏன் இந்த அவசரம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தையும் இழப்பீட்டு அலுவலகத்தையும் நல்லாட்சி அரசாங்கம் சட்டபூர்வமானதாக்கியது என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் மறைந்த அமைச்சர் மங்களசமரவீரவிற்குமே அந்த பெருமை சேரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களின் கருத்துக்களிற்கு நல்லாட்சி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் ஏன் பதிலளிக்கவி;ல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது பதவியில் இருக்கும்அமைச்சர்கள் இந்த விவகாரங்களை பற்றி பேசுவது கண்துடைப்பாகவே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொறிமுறைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவன் என்ற அடிப்படையில்நான் குழப்பமடைந்துள்ளேன் தற்போதுபெருமை ஜிஎல்பீரிசிற்கும் அலிசப்ரிக்கும் செல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவராகசாலிய பீரிஸ் செயற்பட்ட காலத்தில் அவர் வடக்கிற்கு சென்று மக்களை சந்தித்தார் என்பதையும் ஒஸ்டின் பெர்ணான்டோ நினைவூட்டியுள்ளார்.

2020 இல் அவ்வேளை வெளிவிவகார அமைச்சராகயிருந்த தினேஸ் குணவர்த்தன ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவையின் தீர்மானத்திலிருந்து வெளியேறினார்-அமைச்சரவையின் தீர்மானத்தின் படியே அவர் அதனை அறிவித்தார் எனவும் ஒஸ்டின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அதேஅமைச்சரவையை சேர்ந்த அமைச்சர்கள் தாங்கள் நிராகரித்த தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்திலும்; இழப்பீடுகளிற்கான அலுவலகத்திலும் தொங்குகின்றனர்-தாங்கள் விலகியதாக அறிவித்த பின்னர் அவர்கள் அதற்கு உரிமை கோரமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் உண்மை நல்லாட்சி ஆணைக்குழுவை உருவாக்க விரும்பியது என்பது அனைவருக்கும் தெரியும்,நான் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தேன் - பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை 2018 ஒக்டோபர் 18ம் திகதி சமர்ப்பித்தார் அடுத்த சில நாட்களி;ல அரசமைப்பு சதி இடம்பெற்றது.

உச்சநீதிமன்றம்சட்டபூர்வமற்றது என தீர்மானித்த 52 அரசாங்கத்தினால் அது பரிசீலிக்கப்படவில்லை - அதனை குப்பை கூடைக்குள் வீசி எறிந்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

அவர்கள் இரண்டு வருடங்கள் அதனை மறந்து இருந்தார்கள் தற்போது ஆழ்ந்த உறக்கத்தின் பின்னர் அவை மிகவும் பொருத்தமானவையாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள்கேலி செய்கின்றார்களா அல்லது கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது அவர்களிற்கு தெரியாதா?

இந்த நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு ஒருவருக்கு ரொக்கட் விஞ்ஞானம் தேவையில்லை,லலித் வீரதுங்கவையும் காமினிசெனரத்தையும் கேட்டுப்பாருங்கள் அவர்களிற்கு ஜெனீவாவிற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கான  திறமையுண்டு ஆனால்  பிரச்சினை என்னவென்றால் அரசாங்கத்திற்கு அதற்கான மன உறுதிப்பாடே அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் கண்துடைப்பு-இவர்கள் நல்லிணக்கம் குறித்து உண்மையான அக்கறையை வெளிப்படுத்தவேண்டும்,இது மிகவும் நெருக்கடியான தருணத்தில்  முழுநாட்டிற்கும்அவசியமான விடயம்,என தெரிவித்துள்ள ஒஸ்டின் பெர்ணான்டோ பொருளாதார நெருக்கடிகளிற்கு மத்தியில் எங்களிற்கு பொருளாதார தடைகளும் ஏனைய சர்வதேச நெருக்கடிகளும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

No comments