முடங்குகின்றது யாழ்.நகரம்!எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை தடைசெய்யுமாறும் இலங்கை அரசினதும் பொறுபற்ற தன்மையினை கண்டித்தும் முன்னெடுக்கப்படும் போராட்டம் யாழ்.நகரிற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை யாழ். மாவட்ட செயலகம் முன்பாக  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  மாவட்ட செயலகத்திற்கு முன்னால் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், ஊழியர்களை செயலகத்திற்குள் செல்ல தடை விதித்து போராட்டம் நடத்துகின்றனர். பல மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த  ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் என்பவற்றினை முடக்கி போராட்டத்தை தற்போது மீனவர்கள் விஸ்தரித்துள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினம் நாளை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மீனவர்களது போராட்டம் அச்சத்தை அரசிற்கு தோற்றுவித்துள்ளது.


No comments