கிறீஸ் - துருக்கி எல்லையில் புலம்பெயர்ந்த 12 பேர் உறைந்த உடலங்களாக மீட்பு


துருக்கிக்கும் கீரீஸுக்கும் இடையிலான பிசாலா எல்லைப் பகுதியில் உறைந்த நிலையில் 12 புலம்பெயர்ந்தோரின் உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆடைகள் களையப்பட்டு, காலணிகள் இல்லாத நிலையில் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் இதுவரை எந்த நாட்டவர்களது என அடையாளம் காணப்படவில்லை.

கிரீஸ் சட்டவிரோதமாக எல்லையில் குடியேறியவர்களை துருக்கிக்குள் மீண்டும் செல்ல நடவடிக்கை எடுப்பததே அவர்களின் மரணத்திற்கு காரணம் என்று துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.

கிறீஸ் எல்லையில் கிறீஸ் எல்லைப் படைகள் புலம்பெயர்ந்தோர் 22 பேருக்கு எதிராக வன்மறையில் ஈடுபட்டதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

No comments