மீண்டும் வெள்ளைவான்:சாணக்கியன் உறுதி!கல்முனையில்  இளைஞர் ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பி;ல் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான பிரச்சார நடவடிக்கைகளில் முன்னணியில் நின்று செயற்படும் அருள் நிதர்சன் என்ற இளைஞரை வெள்ளை வானில் கடத்துவதற்கான முயற்சி இடம்பெற்றது என வெளியான தகவல்களை பொலிஸார் நிராகரித்துள்ளமை குறித்து  கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

18ம் திகதி பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தை பரந்துபட்டகோணத்திலிருந்து ஆராயவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளிற்கும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தான் தெரிவித்த விடயங்கள் தான் உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினர் சீருடையுடன் பணியாற்றுவதில்லை, என தெரிவித்துள்ள அவர் சிவில் சமூக செயற்பாட்டாளர் செகான் மாலக கமகே கைதுசெய்யப்பட்ட விதம் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

மாற்றுக்கருத்துக்களையும்,கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதையும் ஒடுக்குவதற்கான வழிமுறையாக கடத்தப்படுதல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments